ரென்டிங்கானது மிச்சைல் ஒபாமாவின் நெக்லஸ்!! -அதை வாங்க முற்பதிவுக்கு முண்டியடிக்கும் கூட்டம்-
ஒபாமாவின் மனைவி மிச்சைல் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது அணிந்திருந்த நெக்லஸ் ஒன்று சமூக ஊடகங்களங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் 8 ஆண்டுகள் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் பராக் ஒபாமா. இவரது மனைவி மிச்சைல் ஒபாமா, ஜனநாயகக் கட்சி சார்பில் நடைபெற்ற வீடியோ பிரசார கூட்டத்தில் 19 நிமிடங்கள் பேசினார்.
இதனால் டிரம்ப் திறமையற்றவர், அவர் நாட்டிற்கு தவறான ஜனாதிபதி, அவரை நம்பி இனியும் நாட்டை ஒப்படைக்க முடியாது என்று ஆவேசமாக பேசியிருந்தார்.
அவரின் ஆவேசப் பேச்சு சமூக ஊடகங்களில் பலரது கவனத்தை ஈர்த்துவரும் அதேநேரத்தில், இந்த உரையின்போது அவர் அணிந்திருந்த நெக்லஸ் ஒன்றும் பார்ப்போரை கவர்ந்துள்ளது.
அவர் அணிந்திருந்த நெக்லஸில் ஏ-ழு-வு-நு என்று எழுத்துகள் இடம்பெற்றிருந்தன. மக்கள் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்துவதாக இது இருப்பதாக கருத்துகள் உலவி வருகின்றன.
மேலும், மிச்சைல் ஒபாமாவின் இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே அமெரிக்காவில் கூகுள் தேடல், சமூக வலைத்தளங்களில் மிச்சைல் ஒபாமா நெக்லஸ், வோட் நெக்லஸ், லெட்டர் நெக்லஸ் என பலரும் அதுகுறித்து தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்த நெக்லஸை வாங்க முன்பதிவு மட்டும் 2,000 எண்ணிக்கையை நெருங்கியுள்ளதாக அதை வடிவமைத்த சாரி குத்பெர்ட் தெரிவித்துள்ளார்.
பொதுவாக 4 வாரங்கள் வரை ஒரு நெக்லஸ் வடிவமைக்க எடுத்துக் கொள்வதாக கூறும் சாரி குத்பெர்ட், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் 2 வாரத்தில் தயாரித்து வழங்க முயற்சி செய்யப்படும் என்கிறார்.
ஒரு நெக்லஸின் விலை குறைந்தபட்சம் 300 டாலர் என தெரிவித்துள்ள அவர், எழுத்துக்களின் எண்ணிக்கை மற்றும் அளவுக்கு ஏற்ப 1,200 டாலர் வரையில் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.