SuperTopAds

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை சாளம்பக்கேணி-4 பகுதியில் ஆரம்பம்

ஆசிரியர் - Editor IV
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை சாளம்பக்கேணி-4 பகுதியில் ஆரம்பம்

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி  சுகாதார வைத்திய பணிமனையின் எல்லைக்குட்பட்ட பகுதியில்  டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பான நாவிதன்வெளி சுகாதார வைத்திய பணிமனை  எல்லைக்குள் அமைந்துள்ள சாளம்பைக்கேணி 4 பகுதியில்    வீடு வீடாக குறித்த  சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது.

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் உள்ளிட்ட  பிரதேச பொது சுகாதார   அதிகாரிகள்  சவளக்கடை  சுற்று சூழல் பாதுகாப்பு   பொலிஸ் அதிகாரி  நாவிதன்வெளி பிரதேச சபையினர்  இணைந்து    செவ்வாய்க்கிழமை(18)  காலை முதல்  மதியம் வரை     டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தினை தொடர்ந்து    மேற்கொண்டிருந்தனர்.

இவ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று காலை முதல் வீடுகள்  கல்வி நிலையங்கள் என்பனவற்றில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ .சுகுணனின் வழிகாட்டலில் நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன்  கள நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து இனம் காணப்பட்ட இடங்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் 50க்கும் அதிகமான  வீடுகளில் மேற்கொள்ளப்பட்டதுடன்  நுளம்பு பரவலில் இனம் காணப்பட்ட 5 பேருக்கு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 10 பேருக்கு எதிராக  சிவப்பு அறிக்கை வழங்கப்பட்டது. டெங்கு நுளம்பு பரவக்கூடிய 25  இடங்கள் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து   சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பணியாற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள்  மேற்பார்வை உத்தியோகத்தர்கள் ,பொது சுகாதார பரிசோதகர்கள் ,நுளம்பு கட்டுப்பாட்டு பணியாளர்கள்   பின்னர் டெங்கு நுளம்பு பரவலை தடுக்கும் நடைமுறையில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தெளிவுபடுத்தினர்.