மணி நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன..? சில்லறை காரணத்தை கூறிய தமிழ்தேசிய மக்கள் முன்னணி..
மணிவண்ணன் தமிழ்தேசிய மக்கள் முன்னணியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு கட்சியின் மத்திய குழு சில சில்லறை காரணங்களை முன்வைத்திருக்கின்றது.
குறிப்பாக கடந்த முறை ஜனாதிபதி தேர்தலிலை புறக்கணிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தமை,
பாராளுமன்ற தேர்தலின் போது சிறு குழுக்களை அமைத்து செயற்பட்டமை மற்றும் புலம்பெயர் தேசத்தில் கட்சிக்கு எதிராக செயற்படுபவர் என்று அக் கட்சியால்
அடையாளப்படுத்தப்பட்ட நபருடன் தொடர்புகளை பேணிய குற்றங்கள் மணிவண்ணன் மீது சுமத்தப்பட்டுள்ளது.