SuperTopAds

மரங்களை வெட்டும் போது உரிய நடைமுறைகளை பிரதேச செயலகம் பின்பற்றவில்லை

ஆசிரியர் - Editor IV
மரங்களை வெட்டும் போது உரிய நடைமுறைகளை பிரதேச செயலகம் பின்பற்றவில்லை

மரங்களை வெட்டும் போது உரிய நடைமுறைகளை பிரதேச செயலகம் பின்பற்றவில்லை எனவும் அதனால் தான் சிறு முரண்பாடு ஏற்பட்டது என கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை கல்முனை மாநகர சபை முதல்வருக்கு எதிராக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட போராட்டம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு வெள்ளிக்கிழமை(14) மாலை மேற்கண்டவாறு பதிலளித்தார்.

மேலும் தனது கருத்தில்,

எமது வளாகத்தில் இருந்த 3 பாரிய மரங்கள் எவ்வித நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் வெட்டி அகற்றப்பட்டிருந்தன.

இது சம்பந்தமாக எவ்வித கருத்தையும் சொல்ல நான் விரும்ப வில்லை.ஒரு விடயத்தை மாத்திரம் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

எமது மாநகர வளாகத்தில் தான் கல்முனை பிரதேச செயலகமும் அமைந்துள்ளது. அங்கு நின்ற 3 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது.இம்மரங்கள் 25 வருடங்கள் பழைமை வாய்ந்தமையாகும்.

ஆனால்  இம்மரங்களை வெட்டி அகற்றும் போது உரிய நடைமுறைகளை பின்பற்றி இருக்கவில்லை. அதனால் தான் சிறு முரண்பாடு ஏற்பட்டது.அதனை பேசி தீர்மானிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.