கொரோனா தடுப்பூசி விவகாரம்!! -ரஸ்யா - உலக சுகாதார நிறுவனம் பேச்சுவார்த்தை-
ரஸ்யா கண்டுபிடித்த கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பான கூடுதல் தகவல்களை பெற அந்த நாட்டுடன் உலக சுகாதார நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவித்துள்ளது.
சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் புரூஸ் அய்ல்வார்டு நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இதன் போது அவர் கூறுகையில்:- ரஸ்யாவின் தடுப்பூசி பற்றி முடிவு செய்வதற்கு எங்களிடம் போதிய தகவல்கள் இல்லை. உலக சுகாதார நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில், மொத்தம் 9 தடுப்பூசிகள் இரண்டாவது அல்லது மூன்றாவது கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் ரஸ்யா தடுப்பூசி, அந்த 9 தடுப்பூசிகளில் ஒன்றாக இல்லை என கூறினார்.
மேலும், இந்த தடுப்பூசி பற்றிய கூடுதல் தகவல்களை பெறுவதற்கு உலக சுகாதார நிறுவனமானது, ரஸ்யாவுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.