கட்சி தலமையுடன் பேச எதிர்பார்த்துள்ளேன்..! அமைதியாக இருங்கள். ஆதரவாளர்களுக்கு மணிவண்ணன் கோரிக்கை..
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒற்றுமைக்காக கட்சி தலமையுடன் பேசுவதற்கு எதிர்பார்த்துள்ளேன். அதுவரை அமைதியாக இருங்கள் என அக்கட்சியின் ஊடக பேச்சாளரும், ஸ்தாபகர்களில் ஒருவருமான வி.மணிவண்ணன் கூறியுள்ளார்.
இது குறுத்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எனக்கு எதிராக சதித் திட்டம் செய்யப்பட்டது. அதுதொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரிவல் எடுத்துக் கூறியிருந்தேன்.
இந்த நிலையிலேயே என்னை கட்சியின் தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை கட்சியின் மத்திய குழு எடுத்துள்ளது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அதுதொடர்பில் கட்சியின் தலைமையினால் எனக்கு எந்தவொரு அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. கட்சியின் ஒற்றுமைக்காக தலைமையுடன் பேச்சு நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன். அதனால் ஆதரவாளர்கள் அனைவரும் அமைதி காக்கவேண்டும் என்று வேண்டுகின்றேன் என்றுள்ளது.