திடீர் பல்ட்டி எதற்காக..? தமிழரசு கட்சி மறுசீரமைக்கப்படவேண்டும் என்ற கோஷம் உட்கட்சி மோதலின் வெளிப்பாடா..?

ஆசிரியர் - Editor I
திடீர் பல்ட்டி எதற்காக..? தமிழரசு கட்சி மறுசீரமைக்கப்படவேண்டும் என்ற கோஷம் உட்கட்சி மோதலின் வெளிப்பாடா..?

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழரசு கட்சியின் தலைவர் தோல்வியடைந்த நிலையில் கட்சியில் மறுசீரமைப்பு வேண்டும் எனவும், 

கட்சி தலமை மாற்றப்படவேண்டும் எனவும் தீவிரமாக பேசியதுடன் செயற்பட்டுவந்த கூட்டமைப்பின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது எதிர்மாறான கருத்துக்களை கூறிவருகின்றனர். 

குறிப்பாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தேர்தலில் தோற்றதற்காக மாவை சேனாதிராஜா கட்சி தலமை பொறுப்பிலிருந்து விலகும் அவசியமில்லை என கூறியுள்ளார். 

அதேபோல் மாவை சேனாதிராஜா மனக்கிலேசமடைந்திருந்தால் அதற்காக தாம் மன்னிப்புகோருவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் மற்றொரு நாடாறுமன்ற உறுப்பினராக எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். 

குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்தலுக்கு பின்னர் தமிழரசு கட்சி மறுசீரமைக்கப்படவேண்டும். என பகிரங்கமாக கூறிவந்தனர். அதே கருத்தை பொது நிலைப்பாட்டிலுள்ள சிலரும் கூறினர். 

அவ்வாறான தேவை உண்மையில் இருந்தால் ஏன் அத்தகைய மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவில்லை. எனவும், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் பலட்டி அடித்து

மன்னிப்பு கேட்பதும், இப்போது தலமை மாற்றம் தேவையில்லை என கூறுவதும் எதற்காக? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருப்பதுடன், 

புதிய கூட்டணி ஒன்றுக்கான அடித்தளமிடப்படுவதாக அரசல்புரசலாக பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில் அதன் விளைவா இந்த மாற்றம்? எனவும் கேள்விகள் எழுந்திருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு