SuperTopAds

கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்

ஆசிரியர் - Editor IV
கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்

கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம் ஒன்றினை இன்று(13) முன்னெடுத்துள்ளனர்.

கல்முனை மாநகர முதல்வரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்முனை பிரதேச செயலகத்தில் இருந்து ஊர்வலகமாக கல்முனை பொலிஸ் நிலையம் வரை சென்று கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்திக்க முற்பட்டனர்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றி ஊர்வலமாக சென்ற உத்தியோகத்தர்களை அணுகிய பொறுப்பதிகாரி எச்சரிக்கை செய்த பின்னர் திருப்பி அனுப்பினார்.மேலும் கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை பிரதேச செயலகம் ஆகியவை ஒரே வளாகத்தில் காணப்படுவதுடன் ஒரே நுழைவாயில் ஊடாக உத்தியோகத்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அத்துடன் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மற்றும் கல்முனை பிரதேச செயலாளர்  எம்.எம்.நசீர் செயற்பட்டு வரகின்றமை குறிப்பிடத்தக்கது.மேலும் இவ்வளாகத்தில் நின்ற ஒரு பாரிய மரத்தினை வெட்டியமைக்காக பிரதேச செயலக உத்தியோகத்தர்களை அநாகரீக வார்த்தைகளால் திட்டியதாக மாநகர சபை முதல்வர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.