பேருந்து பின்னோக்கி வருவதை அறியாத முதியவர் விபத்தில் சிக்கி பலி..! பேருந்து நிலையத்திற்குள் நடந்த துயரம்..

ஆசிரியர் - Editor
பேருந்து பின்னோக்கி வருவதை அறியாத முதியவர் விபத்தில் சிக்கி பலி..! பேருந்து நிலையத்திற்குள் நடந்த துயரம்..

வவுனியா பேருந்து நிலையத்திற்குள் பேருந்து மோதியதில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தொிவருவதாவது, பேருந்து ஒன்றை பின்னோக்கி செலுத்தும்போது அதனை அறியாதமல் நின்ற முதியவர் மீது பேருந்து மோதியிருக்கின்றது. 

இதனால் படுகாயமடைந்த முதியவரை ஆட்டோ மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 


விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Radio