திடீரென வெடித்தது எரிமலை!! -5,000 அடிக்கு எழுந்த புகைமண்டலம்-

ஆசிரியர் - Editor III
திடீரென வெடித்தது எரிமலை!! -5,000 அடிக்கு எழுந்த புகைமண்டலம்-

இந்தோனேசியாவின் உள்ள மவுண்ட் சினாபங்க் என்கின்ற எரிமலை திடீரென வெடிக்கத் தொடங்கியதால் காற்றில் 5 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் பரவியுள்ளது.

சுமார் 267 மில்லியன் மக்கள் வசிக்கின்ற இந்தோனேசியாவில் பூகம்பங்கள், சுனாமிகள் மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றது. குறித்த நாட்டின் இரு புறங்களிலும் பசிபிக் நெருப்பு வளையம் உள்ளதினாலேயே இவ்வாறான பாதிப்புக்களை அந்த நாடு அடிக்கடி சந்தித்து வருகின்றது. 

இந்நிலையில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை இன்று செவ்வாய் கிழமை வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து வானில் சுமார் 5,000 அடி உயரத்தில் புகை வெளியேறத் தொடங்கியுள்ளது. 

பாதுகாப்பு காரணங்களுக்கான எரிமலையை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் தொலைவுவரை உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு