லெபனான் பெய்ரூட்டில் பெரும் போராட்டம்!! -வன்முறையாக மாறியதால் பெரும் அவலம்-

ஆசிரியர் - Editor III
லெபனான் பெய்ரூட்டில் பெரும் போராட்டம்!! -வன்முறையாக மாறியதால் பெரும் அவலம்-

லெபனானில் அண்மையில் நடந்த பாரிய வெடி விபத்தை தொடர்ந்து அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்ததால் போராட்டத்தால் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் அங்குள்ள பெய்ரூட் நகரில் பெருமளவான மக்கள் ஒன்று கூடிய நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் நபரின் பெரும்பகுதி பற்றி எரிந்து வருகிறது.

இந்த கோரமான வெடி விபத்துக்கு அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம் என்று பெய்ரூட் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் அரசின் அலட்சிய போக்கை கண்டித்து பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கி உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை நூற்றுக்கணக்கான மக்கள் பெய்ரூட்டில் உள்ள அமைச்சக கட்டிடங்களுக்குள் புகுந்து சூறையாடினர். ஆட்கள் இன்றி காலியாக இருந்த வெளியுறவு அமைச்சகத்தின் கட்டிடத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் இனி இந்த கட்டிடம் போராட்ட அமைப்பின் தலைமையகமாக இருக்கும் என அறிவித்தனர். 

அதே போல் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகங்களின் கட்டிடங்களையும் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

போராட்டக்காரர்கள் ஒரு பிரிவினர் பெய்ரூட்டில் உள்ள வங்கி சங்கத்தின் தலைமை கட்டிடத்தை தாக்கி தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். அதேபோல் நாடாளுமன்றத்துக்கு முன்பு திரண்ட போராட்டக்காரர்கள் போலீசார் ஏற்படுத்தியிருந்த தடுப்பு வேலிகளை தாண்டி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர்.

இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் இது கைகலப்பாக மாறியது. அதனைத் தொடர்ந்து பெய்ரூட் முழுவதும் பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெய்ரூட் நகரில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று இந்த போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்களை அடித்து நொறுக்கியதோடு சாலைகளில் வாகனங்களுக்கு தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச்சூடும் நடத்தினர்.

இதன் காரணமாக வெடி விபத்தால் ஏற்கனவே நிலைகுலைந்து உள்ள பெய்ரூட் நகரம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது.

எங்கு பார்த்தாலும் பற்றி எரியும் வாகனங்கள் மற்றும் போராட்டக்காரர்கள் போலீசாரின் மோதல்களால் பெய்ரூட் போர்களமாக மாறி இருக்கிறது. இந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 700 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு