திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை

ஆசிரியர் - Editor IV
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை

கடந்த 05ஆம் திகதி நடைபெற்ற 2020 பாராளுமன்றத் தேர்தலில், திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சிறி லங்கா பொதுஜன பெரமுன – 1 லட்சத்து 26ஆயிரத்து 012 வாக்குகளைப் பெற்று 3 அசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி – 1லட்சத்து 2 ஆயிரத்து 274 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 43 ஆயிரத்து 319 வாக்குகளைப் பெற்று  1 ஆசனத்தையும்,  தேசிய காங்கிரஸ் 38 ஆயிரத்து  911 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றிக்கொண்டன.

2019ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி திகாமடுல்ல மாவட்டத்தில்  5லட்சத்து 13 ஆயிரத்து 979 பேர் தகுதிபெற்றிருந்தனர்.   அஞ்சல் வாக்காளர்களாக  28 ஆயிரத்து  668 தகுதி பெற்றிருந்தனர்.

இவர்கள் வாக்களிக்கவென  525 வாக்கெடுப்பு நிலையங்கள் மாவட்டத்தின் அம்பாரை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய தேர்தல் தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்தன.

இவர்களது வாக்குகள் யாவும் நேற்றைய தினம் காலை 8 மணிமுதல் அம்பாரை ஹாடி தொழில்நுட்பக்கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த  74 வாக்கெண்ணும் நிலையங்களில் எண்ணப்பட்டடு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.  

இத்தேர்தல் கடமைகளில்   6000க்கும் மேற்பட்ட அரச  உத்தியோகத்தர்கள், 2000க்கும் மேற்பட்ட பொலிசாரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

07  பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்காக அங்கரீக்கப்பட்ட அரசியல் கட்சிகள் - 20  மற்றும், 34  சுயேட்சைக்குழுக்களும் பேட்டியிட்டன.

அளிக்கப்பட்ட 4லட்சத்து 2ஆயிரத்து 344 வாக்குகளில் 15ஆயிரத்து 347 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. அதன்படி செல்லுபடியான 3 லட்சத்து 85 ஆயிரத்து 997 வாக்குகளில் இருந்து 7 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் சுமுகமான தேர்தலை நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்டச் செயலாளருமான டி.எம்.எல். பண்டாரநாயக்க நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு