SuperTopAds

வடகிழக்கில் 6 ஆசனங்களை தவறிவிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாரிய வீழ்ச்சி..! கட்சி தலைவர் மயிரிழையில் தப்பினார், தமிழரசு கட்சி தலைவர் மாவை தோல்வி..

ஆசிரியர் - Editor I
வடகிழக்கில் 6 ஆசனங்களை தவறிவிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாரிய வீழ்ச்சி..! கட்சி தலைவர் மயிரிழையில் தப்பினார், தமிழரசு கட்சி தலைவர் மாவை தோல்வி..

தமிழ்தேசிய கூட்டமைப்பு வடகிழக்கு மாகாணங்களில் 10 ஆசனங்களை கைப்பற்றியிருக்கின்றது. எனினும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்று இந்த தேர்தல் மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. 

கடந்த 2015ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 515,963 வாக்குகளை பெற்று 2 தேசிய பட்டியல் ஆசனங்களுடன் 16 ஆசனங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பை கைப்பற்றியிருந்தது. 

மேலும் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் 5 ஆசனங்களை கைப்பற்றியிருந்தது. இம்முறை 2020ம் ஆண்டு தேர்தலில் 327168 வாக்குகளை பெற்று வடகிழக்கு மாகாணங்களில் 10 ஆசனங்களை கைப்பற்றியிருக்கின்றது. 

குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் வெறும் 112967 வாக்குகளை மட்டும் பெற்று 3 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கின்றது. கடந்த 5 வருடங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு நடந்துகொண்ட முறைகளின் அடிப்படையில், 

மக்கள் இந்த ஜனநாயக தீர்ப்பினை வழங்கியிருக்கின்றார்கள். மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மிகுந்த போட்டிக்கு மத்தியில் வெற்றி பெற்றிருக்கின்றார். 

எனினும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தாய் கட்சியான தமிழரசு கட்சியின் தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான மாவை சோ.சேனாதிராஜா யாழ்.மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார்.