பூமியை வந்தடைந்த நாசா வீரர்கள்!! -விண்வெளியில் வெற்றி பயணம்-

ஆசிரியர் - Editor III
பூமியை வந்தடைந்த நாசா வீரர்கள்!! -விண்வெளியில் வெற்றி பயணம்-

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இன்று திங்கட்கிழமை வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர் நாசாவின் இரு விண்வெளி வீரர்கள். 

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற நாசாவின் இரு விண்வெளி வீரர்களான டக் ஹர்லி @Astro_Doug  மற்றும் பாப் பெஹன்கென் @Bob Behnken  ஆகிய இரு விண்வெளிகளும் 63 நாட்களின் பின்   பாதுகாப்பாக  பூமிக்கு திரும்பினர். 


ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX)   நிறுவனம்  சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு  (international space station)      இரண்டு நாசாவின்  விண்வெளி வீரர்களுடன்  கடந்த மே மாதம் 31 ஆம் திகதி   ஃபல்கான் 9 (Falcon 9)  என்ற ரொக்கெட்டின் மூலம் ஏவப்பட்டது. இதன் கூம்பு பகுதியில் பொருத்தப்பட்டCrew Dragon) என்ற கூம்பு பகுதியில் விண்வெளி வீரர்கள்  பயணித்ததுடன் விண்வெளி நிலையத்தை அடைந்ததுடன் அதில்  Dragon எயார் லொக் செய்யப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்றனர். 

இந்நிலையில் அங்கு விண்வெளி  பணிகள் முடித்து  இன்று 63 நாட்களின் பின்  இலங்கை நேரப்படி அதிகாலை Dragon விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து   இருவரும் ஃபோலோரிடா வளைகுடா கடற்பகுதியில் உள்ள மெக்சிக்கோ வளைகுடாவில் பாதுகாப்பாக தரை இறங்கியுள்ளனர்.

முதல் முறையாக தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உடன் சேர்ந்து நாசா செயல்படுத்தும் இத்திட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. இதுவரை சொந்த விண்வெளி திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வந்த நாசா, முதல் முறையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த விண்கலத்தை பயன்படுத்தி விண்வெளி வீரர்களை விண்ணிற்கு அனுப்பியது.


நாசா விண்வெளி வீரர்கள்  விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இந்த திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விண்வெளி நிலையத்திற்கு சென்று பூமிக்கு திரும்பி வீட்டிற்கு வருவதையிட்டு  இவர்களது  பிள்ளைகள் வீட்டில் மகிழ்ச்சி வெளியிட்டு வரவேற்கும் புகைப்படமும் ருவிட்டரில் வெளியாகியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு