ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாவட்டத்தை வெல்லும் - தமிழ் வேட்பாளர் எஸ் .சாந்தலிங்கம்

ஆசிரியர் - Editor III
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாவட்டத்தை வெல்லும் - தமிழ் வேட்பாளர் எஸ் .சாந்தலிங்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாவட்டத்தை வென்று சாதனைபடைக்கும்   என பொதுஜன பெரமுன கட்சியின்திகாமடுல்ல  தேர்தல் மாவட்ட  தமிழ் வேட்பாளர் எஸ். சாந்தலிங்கம் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்ல  தேர்தல் தொகுதியில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில்  இலக்கம் 10 இல்  களமிறங்கிய இவர் விசேட செய்தியாளர் சந்திப்பை இன்று (2) மாலை சேனைக்குடியிருப்பில்  மேற்கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

தமிழ் மக்களாகிய  நாம் சிதைந்து போயுள்ள சமூகத்தை ஒன்றிணைத்து ஆட்சியில் பங்காளராக இருக்கும் சமூகமாக மாற வேண்டும் அதற்காக என்னை தமிழ் மக்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட  வலியுறுத்தினர் அதனால் நான்  பொதுஜன பெரமுன இணைந்து போட்டியிடுகிறேன். எமது ஜனாதிபதி வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினையும் வழங்க நடவடிக்கை எடுத்துடன் அதிகமான அபிவிருத்திகளையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.இன்னும் 15 வருடங்களுக்கு அதிகமாக எங்கள் அரசாங்கத்தின் ஆட்சி மேலோங்கி காணப்படும்.  எனவே நாம்  ஆளும் கட்சியுடன் இணைந்து தமிழ் மக்கள்  வெல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.