நாங்கள் எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கோ அல்லது சுயேட்சைக்குழுக்களுக்கு எதிரானவர்கள் அல்லர்

ஆசிரியர் - Editor III
நாங்கள் எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கோ அல்லது சுயேட்சைக்குழுக்களுக்கு எதிரானவர்கள் அல்லர்

நாங்கள் எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கோ அல்லது சுயேட்சைக்குழுக்களுக்கு எதிரானவர்கள் அல்லர் எனவும் எமது பெயரை களங்கப்படுத்தி அரசியல் இலாபங்களை தேட வேண்டாம் என அரசாங்க மருத்துவ மாணவர் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர் முஹமட் நாஸீக் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் சில அரசியல் கட்சிகள் தமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி வாக்கு சேகரிப்பது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு இன்று(2) மதியம் அம்பாறை கல்முனை பகுதியில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் சில அரசியல் தரப்புகள் மக்களை திசைதிரப்ப முயல்கின்றன.நாங்கள் எந்தவொரு கட்சிக்கோ சுயேட்சைக் குழுக்கோ அல்லதுஅரசியல் பிரபல்யத்திற்கோ அல்லது ஆதரவாளர்களுக்கு எதிரானவர்கள் அல்லர்.

தென்கிழக்கு பிராந்தியத்தில் உள்ள  தென்கிழக்கு பட்டதாரிகள் பட்டதாரிகள் மாணவர் அமைப்பு அம்பாறை மாவட்ட பட்டதாரி மாணவர் ஒன்றியம் ஆகிய இரு அமைப்புகளும்  தற்போது வெளிப்படுத்தி உள்ள இனவாதம் மற்றும் பிரதேச வாதத்தை தூண்டும் சுவரொட்டிகள் பதாதைகள் ஆகியவற்றிற்கும் எமக்கும் எதுவித  தொடர்பும் இல்லை.எனவே வாக்களிப்பது நம் ஒவ்வொருவரதும் உரிமை மட்டுமல்லாது மக்கள் அதனை சரிவர உணர்ந்து செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம் என குறிப்பிட்டார்.