SuperTopAds

பிரேசிலை புரட்டி போடும் கொரோனா!! -93 ஆயிரம் பேர் பலி-

ஆசிரியர் - Editor III
பிரேசிலை புரட்டி போடும் கொரோனா!! -93 ஆயிரம் பேர் பலி-

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 6 இலட்சத்து 87 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இவற்றில் பிரேசில் நாட்டில் மட்டும் 93 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் 

தற்போதைய நிலவரப்படி, ஒரு கோடியே 79 இலட்சத்து 98 ஆயிரத்து 419 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 59 இலட்சத்து 93 ஆயிரத்து 566 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 686 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து ஒரு கோடியே 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். 

ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 இலட்சத்து 87 ஆயிரத்து 783 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசிலில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 93 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 1,57,877

பிரேசில் - 93,616

மெக்சிகோ - 46,688

இங்கிலாந்து - 46,193

இந்தியா - 36,511 

இத்தாலி - 35,146

பிரான்ஸ் - 30,265

ஸ்பெயின் - 28,445