யாழ்.மாவட்டத்தில் அதிக தேர்தல் விதிமீறல்களுக்கு சொந்தமான வேட்பாளர்..! தேர்தலில் வென்றாலும் பதவி பறிக்கப்படும், உண்மையை உடைத்த சுமந்திரன்..

ஆசிரியர் - Editor
யாழ்.மாவட்டத்தில் அதிக தேர்தல் விதிமீறல்களுக்கு சொந்தமான வேட்பாளர்..! தேர்தலில் வென்றாலும் பதவி பறிக்கப்படும், உண்மையை உடைத்த சுமந்திரன்..

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் பல தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவதுடன், வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பதாக கூறி தேர்தல் தற்போது மேற்கொள்ளும் தேர்தல் விதி மீறலுக்காக தேர்தலில் வென்றாலும் பதவி இழப்பார். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். 

தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், வேலைவாய்ப்பு வழங்குவேன் என வேட்பாளர் ஒருவர் இளைஞர்களிடம் விண்ணப்பங்களை பெறுகின்றார். 

அவ்வாறு எந்தவொரு வேலைவாய்ப்பையும் வழங்க முடியாது. மேலும் இவ்வாறான நடவடிக்கைகள் அப்பட்டமான தேர்தல் விதி மீறலாகும். குறித்த வேட்பாளர் தொடர்பாக ஏற்கனவே பல முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். 

அவர் இப்படி பல வித்தைகளை காட்டி தேர்தலில் வெற்றிபெற்றாலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கமாட்டார். நிச்சமாக உறுப்புரிமையை இழப்பார் என்றார்.