அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு சிக்கல்!! -விரைவில் வரும் என்கிறார் டிரம்ப்-

ஆசிரியர் - Editor III
அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு சிக்கல்!! -விரைவில் வரும் என்கிறார் டிரம்ப்-

சீனா அரசின் விமர்சனம் மிக்க நடவடிக்கைகளை அடுத்து அந்நாட்டின் செயலிகளில் ஒன்றான டிக் டாக்கிற்கு அமெரிக்காவில் தடை விதிப்பது குறித்து பரிசீலிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கொரோனா வைரஸை பரப்பியதாக கூறி, சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருக்கிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது. இந்த நிலையில், சீனாவின் செயலியானா டிக்டோக்கை தடை செய்ய உள்ளதாக டிரம்ப் கூறி இருக்கிறார். 

டிக் டாக்கிற்கு பதிலாக வேறு மாற்று செயலியை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே,   டிக் டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் ஒரு செய்திகள் வெளியாகியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு