சீனாவில் மீண்டும் ஆட்டத்தை தொடங்கும் கொரோனா!! -5 நாட்களில் 400 பேருக்கு தொற்று-

ஆசிரியர் - Editor II
சீனாவில் மீண்டும் ஆட்டத்தை தொடங்கும் கொரோனா!! -5 நாட்களில் 400 பேருக்கு தொற்று-

சீனாவில் மீண்டும் உயிர் கொல்லி கொரோனா வைரஸ் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதன்படி கடந்த 5 நாட்களில் 400 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்கு அவ்வப்போது கொரோனா தலைகாட்டி வருகிறது.  இந்த நிலையில், சீனாவின் உய்குர் இன மக்கள் அதிகம் வசிக்க்கும் பகுதியான ஜின் ஜியாங் மாகாணத்தில்,  கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. 

கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சீனாவில் கொரோனா வைரசின் 2-வது அலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அந்நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

Radio