ராஜபக்சக்களுடன் யாருக்கு ‘டீல்’..? கூட்டமைப்பு மீதான குற்றச்சாட்டுகளை முடிந்தால் நிரூபித்துக் காட்டுமாறு விக்கிக்கு சரவணபவன் சவால்..

ஆசிரியர் - Editor
ராஜபக்சக்களுடன் யாருக்கு ‘டீல்’..? கூட்டமைப்பு மீதான குற்றச்சாட்டுகளை முடிந்தால் நிரூபித்துக் காட்டுமாறு விக்கிக்கு சரவணபவன் சவால்..

ராஜ­பக்­சக்­க­ளு­டன் கடந்த காலங்­க­ளில் ‘டீல்’ பேசி­ய­வர்­க­ளை­யும், பின் கத­வால் ஒப்­பந்­தம் செய்த­வர்­க­ளை­யும் தன்­னு­டன் கூட வைத்­துக் கொண்டு, அவர்­களை வேட்­பா­ளர்­க­ளா­க­வும் களமிறக்கி விட்டு, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, பெர­முன இடையே 

ஒப்­பந்­தம் இருப்­ப­தாக வாய் கூசா­மல் பொய் சொல்­கி­றார் முன்­னாள் நீதி­ய­ர­சர். ராஜபக்சக்களுடன் கூட்­ட­மைப்பு எந்த உற­வு­மில்லை என்­ப­தைத் துணிந்து சொல்­வ­து­டன், குற்றச்சாட்­டுக்­களை முன்­வைக்­கும் முன்­னாள் நீதி­ய­ர­சர் 

மக்­கள் என்ற நீதி­ப­தி­கள் முன்­பாக முடிந்­தால் ஆதா­ரங்­களை முன்­வைக்­கட்­டும் என்று சவால் விடு­கின்­றேன். ஆனால் ராஜ­பக்­சக்­க­ளு­டன், அவ­ருக்­கும் அவர் கூட இருப்­ப­வர்­க­ளுக்­கும் ‘டீல்’ இருக்­கின்­றது என்­பதை என்­னால் ஆதா­ரங்­க­ளு­டன் நிரூ­பிக்க முடி­யும்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின்  யாழ்ப்­பா­ணம் மற்­றும் கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் வேட்­பா­ள­ரு­மான ஈ.சர­வ­ண­ப­வன் தெரி­வித்­தார். மட்­டு­வில் பிர­தே­சத்­தில் நேற்று இடம்­பெற்ற தேர்­தல் 

பரப்­பு­ரைக் கூட்­டத்­தி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, முன்னாள் நீதி­ய­ர­சர் விக்­னேஸ்­வ­ரன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மீது அபாண்­ட­மான குற்றச்சாட்­டுக்­க­ளைத் தொடர்ச்­சி­யா­கக் கூறி வரு­கின்­றார். 

அவ­ரது குற்­றச்­சாட்­டுக்­கள் மக்­கள் மத்­தி­யில் தாக்­கம் செலுத்­த­வில்லை. ஆனா­லும் அவரோ சற்றும் மனம் தள­ராத விக்­கி­ர­மா­தித்­தன் போன்று ஏதா­வது பொய்­யை­யும் புரட்­டை­யும் சொல்லி எப்­பா­டு­பட்­டா­வது இந்­தத் தேர்­த­லில் வெற்றி பெறத் துடிக்­கின்­றார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மீதான ஆத­ர­வுத் தளத்­தைச் சிதைப்­ப­தற்­காக அவர் கடை­சி­யாக எடுத்­துள்ள ஆயு­தம்­தான், பெர­மு­ன­வு­டன் கூட்­ட­மைப்­புக்கு இர­க­சிய ஒப்­பந்­தம் இருக்­கின்­றது என்ற கருத்­துரை. அவ­ரது மன­சாட்­சிக்கே தெரி­யும், தான் சொல்­வது பச்­சைப் பொய் என்று. 

இருப்­பி­னும் அர­சி­யல் ஆதா­யத்­துக்­காக அதனை அவிழ்த்து விடு­கின்­றார்.விக்­னேஸ்­வ­ர­னின் அணி­யில் இருந்து கொண்டு இந்­தத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­ப­வர்­கள்­தான் ராஜ­பக்­சக்­க­ளு­டன் ‘டீல்’ வைத்­தி­ருக்­கின்­றார்­கள். அதனை திசை திருப்ப இந்­தப் பழியை கூட்­ட­மைப்பு மீது 

போட்­டாரோ நான் அறி­யேன்.மஹிந்த ராஜ­பக்ச அமைச்­ச­ராக இருந்த காலத்­தில் அவ­ரது தனிப்பட்ட செய­ல­ராக இருந்­த­வர் சுரேஷ் பிறே­ம­சந்­தி­ரன். விக்­னேஸ்­வ­ர­னுக்கு இது தெரி­யுமோ தெரி­யாது.2010ஆம் ஆண்டு போர் முடிந்த கையோடு ஜனா­தி­ப­தித் தேர்­தல் நடந்­தது. 

ஒட்­டு­மொத்த தமி­ழி­ன­மும் மஹிந்­த­வுக்கு எதி­ராக சீற்­ற­மு­டன் எழுந்­தது. அந்­தச் சந்­தர்ப்­பத்­தில் தமி­ழர்­க­ளின் கையா­லேயே அவர்­க­ளின் கண்­ணைக் குத்த வைக்க ராஜ­பக்­சக்­கள் பாடு­பட்­ட­னர். ராஜ­பக்­சக்­க­ளு­டன் ‘டீல்’ பேசிக் கொண்டு பணத்­தை­யும் பெற்­றுக் கொண்டு 

அந்­தத் தேர்­த­லில் தமி­ழர் வாக்­கு­க­ளைப் பிரிக்க கள­மி­றங்­கி­ய­வர் யார்? அவர் 2019ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தித் தேர்­த­லி­லும் போட்­டி­யிட்­டார். அவர் யார் என்று நான் சொல்­லியா நீங்­கள் தெரிந்து கொள்­ள­வேண்­டும்.2010ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தித் தேர்­த­லைத் தொடர்ந்து 

நாடா­ளு­மன்­றத் தேர்­தல் வந்­தது. தமி­ழ­ரின் ஒற்­று­மைக்­கான கோசம் பெரும் எடுப்­பில் ஒலித்­தது. ஆனா­லும் அந்த ஒற்­று­மை­யைக் குலைக்க விரும்­பிய ராஜ­பக்­சக்­கள் தமி­ழர் தாய­கத்­தில் பணம் கொடுத்து சுயேச்­சைக் குழுக்­களை டசின் கணக்­கில் கள­மி­றக்­கி­னர். 

அந்­தத் தேர்­த­லில் கூட்­ட­மைப்­பின் வாக்கு வங்­கி­யைச் சிதைத்த சிறீ­காந்­தா­வும், சிவா­ஜி­லிங்­க­மும் தனித்­துப் போட்­டி­யிட்­ட­னர். அவர்­கள் யாரு­டைய தேவையை நிறை­வேற்ற, யாரு­டன் ‘டீல்’ பேசிக் கள­மி­றங்­கி­னர் என்­பது தெரி­யாதா?

வடக்கு மாகாண சபை­யில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் பிர­தி­நிதி என்று தன்­னைத் தானே கூறிக் கொண்­ட­வர், தனது தனிப்­பட்ட உத­வி­யா­ள­ராக, அமைச்­ச­ரான பின்­னர் பொது­மக்­கள் தொடர்பு அதி­கா­ரி­யாக யாரை நிய­மித்­தி­ருந்­தார்? அவர் யார்?

ராஜ­பக்­சக்­க­ளின் புல­னாய்வு அதி­கா­ரியை நிய­மித்­தி­ருந்த அவர் இன்று உங்­க­ளு­டன் சக வேட்பாளர்? இவை­யெல்­லாம் மக்­க­ளுக்­குத் தெரி­யாதா? இவை எல்­லா­வற்­றுக்­கும் மேலாக 2015ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தித் தேர்­த­லில் யாரு­டைய ஏவ­லில் அவர் 

அந்­தத் தேர்­த­லைப் புறக்­க­ணிக்­கு­மாறு கோரி­னார்?2019ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தித் தேர்­த­லில் கோத்­தா­பய ராஜ­பக்ச போட்­டி­யிட்­ட­போது கூட்­ட­மைப்பு அவ­ரைப் பகி­ரங்­க­மாக எதிர்த்­தது. அவரைத் தோற்­க­டிக்­கு­மாறு தமிழ் மக்­க­ளுக்கு அறை­கூ­வல் விடுத்­தது.

தமிழ் மக்­களை கோத்­தா­வுக்கு எதி­ராக வாக்­க­ளிக்­கத் தூண்­டி­யது. 3 லட்­சத்து 20 ஆயி­ரம் மக்­கள் கூட்­ட­மைப்­பின் வேண்­டு­கோ­ளுக்கு தலை­சாய்த்து வாக்­க­ளித்­தார்­கள். ஆனால் நீதி­ய­ர­சரே நீங்கள் என்ன செய்­தீர்­கள்? கோத்­தா­ப­ய­வுக்கு எதி­ராக வாக்­க­ளிக்­கச் சொன்­னீர்­களா? 

இல்­லைத்­தானே. அப்­ப­டி­யா­னால் இப்­போது சொல்­லுங்­கள், ராஜ­பக்­சக்­க­ளு­டன் இர­க­சிய ‘டீல்’ பேசி­யது கூட்­ட­மைப்பா? விக்­னேஸ்­வ­ரன் அணியா?நீதி­ப­தி­க­ளான மக்­களே, விட­யங்­களை சீர்தூக்கி ஆராய்ந்து உங்­கள் தீர்ப்­புக்­களை எதிர்­வ­ரும் 5ஆம் திகதி 

வழங்­குங்­கள் என்று அன்­பு­ரி­மை­யு­டன் கேட்­டுக் கொள்­கின்­றேன், என்­றார்.

Radio