நாவிதன்வெளி பகுதிகளில் தேர்தல் ஒழுங்கமைப்பு முறை தொடர்பில் ஆராயும் கூட்டம்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல்-2020 நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒழுங்கமைப்பு முறை தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று நடைபெற்றது.
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன் நாவிதன்வெளி கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி வீ.நிதர்சினி, கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித் ,கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட திணைக்களத்தின் தலைவர்களும் பங்குபற்றினர்.
இதன் போது தேர்தல் நடவடிக்கைக்காக கடமைக்கு செல்லும் அதிகாரிகள் தற்காலிகமாக தற்குவதற்கான ஒழுங்கமைப்புகளை பாடசாலை ரீதியாக மேற்கொள்வது தொடர்பிலும் கிராம சேவகர்களின் குறைநிறைகளும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.அத்துடன் தேர்தல் கடமைக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகளை மிளவும் நிர்வாகத்திடம் ஒப்படைப்பது தேர்தல் கால முன்னாயர்த்த நடவடிக்கைகளை பாடசாலை அதிபரின் ஊடாக எவ்வாறு முன்னெடுப்பது போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன