கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு எச்சரிக்கை!! -வாசனை, சுவை, கேட்கும் திறன் அற்றுப்போகுமாம்-

ஆசிரியர் - Editor II
கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு எச்சரிக்கை!! -வாசனை, சுவை, கேட்கும் திறன் அற்றுப்போகுமாம்-

உயிர் கொல்லி கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விடுபட்டவர்களுக்கு வாசனை, சுவை மற்றும் கேட்கும் திறனை இழக்கின்றார்கள் என்று இங்கிலாந்து அறிவியலாளர்கள் எச்சரிக்கை தகவல் ஒன்றினை விடுத்துள்ளனர். 

குறிப்பாக கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் பத்தில் ஒருவர் வாசனை அல்லது சுவை அறியும் திறனை நிரந்தரமாக இழப்பதாக இத்தாலி நாட்டைச் சேர்ந்த நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்தது.

தற்போது, மான்செஸ்டர் அறிவியலாளர்கள் கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களுக்கு கேட்கும் திறனிலும் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்றிலிருந்து கண்டறிந்துள்ளார்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வயது வந்த 121 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் வழங்கி பதில்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளிலேயே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Radio