100,000 வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் ஆரம்பக் கூட்டம்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஆலோசனையில் நாட்டை கட்டியெழுப்பும் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் கீழ் 100000 வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான பிரதேச மட்ட செயற்குழுவின் ஆரம்பக் கூட்டம் அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன் கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித் நைட்டா நிலைய மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் கே.எல் சகரீயா நாவிதன்வெளி பிரதேச நைட்டா நிலைய பொறுப்பதிகாரி ஏ.சி சாஜஹான் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட திணைக்களத்தின் தலைவர்களும் பங்குபற்றினர்.
மேலும் இவ்வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 34 பயிற்சி நெறிகளுக்கு பயிற்சி வழங்குவதற்கான இடங்கள் பயிற்சி வழங்குவதற்கான வளவாளர்கள் தொழிலின் போது பயிற்சி போன்ற விடயங்கள் பிரதேச செயலாளரினால் கலந்துரையாடப்பட்டது.
முதலாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான 6 மாத கால பயிற்சி நெறியில் இரு வாரங்கள் தலைமைத்துவ பயிற்சி வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.