ஜெயலலிதான் வீட்டில் என்ன இருந்தது? -அரசில் அறிவிப்பால் பிரமிப்பு-

ஆசிரியர் - Editor III
ஜெயலலிதான் வீட்டில் என்ன இருந்தது? -அரசில் அறிவிப்பால் பிரமிப்பு-

அரசுடைமையாக்கப்பட்ட மறைந்த ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் உள்ளவைகள் என்ன? என்பதை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் போயஸ் கார்டனில் உள்ளது. இந்த இல்லத்தை தமிழக அரசு அரசுடைமையாக்கியது. 

குறித்த இல்லம் அரசுடைமையாக்கியது தொடர்பாக அரசிதழில் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்பட உள்ளது. 

வேதா இல்லத்தில் 4 கிலோ தங்கம் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், 601 கிலோ வெள்ளி பொருட்கள் உள்பட ஒட்டு மொத்தமாக 32 ஆயிரத்து 721 பொருட்கள், 11 தொலைக்காட்சிகள், 38 குளிர்சாதன பெட்டிகள், 29 தொலைபேசிகள், ஓட்நர் உரிமம், வருமான வரி உள்ளிட்ட 653 ஆவணங்கள், துணிகள், போர்வைகள் என 10 ஆயிரத்து 448 பொருட்கள், 8376 புத்தகங்கள் உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு