நாடாளுமன்ற தேர்தல், பேஸ்புக் நிறுவத்திற்கு 3 லட்சத்து 3610 அமொிக்கன் டொலர் செலவிட்டுள்ள இலங்கை அரசியல்வாதிகள்..! முன்னிலையில் தமிழ் அரசியல்வாதிகள்..
நாடாளுமன்று தேர்தலுக்காக இலங்கை அரசியல்வாதிகள் 19717 பேர் சுமார் 3 லட்சத்து 3 ஆயிரத்து 610 அமொிக்கன் டொலர் பேஸ்புக் நிறுவனத்தின் ஊடாக செலவிட்டிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் உத்தியோகபூர்வ தகவலை வெளியிட்டிருக்கின்றது.
இதன்படி தேசிய அளவில் அதிகளவு பணம் செலவிட்டவர்கள் 10 போின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதன்படி 1ம் இடத்தில் 13 ஆயிரத்து 152 அமொிக்கன் டொலர் செலவிட்டு சஜித் பிறேமதாஸ முதலிடத்தில் உள்ளார்.
2ம் இடத்தில் 11 ஆயிரத்து 319 அமொிக்கன் டொலர் செலவிட்டு அங்கஜன் இராமநாதன் உள்ளார். இதேபோல் வடமாகாணத்தில் அதிக பணம் செலவிட்டோர் பட்டியலில் உள்ள முதல் 10 நபர்களில் 1ம் இடத்தில் அங்கஜன் இராமநாதனும்,
2ம் இடத்தில் எம்.ஏ.சுமந்திரனும் உள்ளனர். வடக்கு மாகாணத்திலிருந்து மட்டும் 21 ஆயிரத்து 182 அமொிக்கன் டொலர் பணம் விளம்பரத்திற்காக செலவிடப்பட்டிருக்கின்றது.