தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் போலி வைத்தியரின் முகம் அம்பலமானது
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் போலி வைத்தியரின் முகம் அம்பலமாகியுள்ளது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இரா.சயனொளிபவன் என்ற பெயருடன் அடையாக வைத்தியர் என கூறி வாக்கு சேகரிக்கும் இளைஞர் ஒருவரின் போலி வேசத்தை அவரது கட்சி சார் உறுப்பினர்களும் எதிர்த்தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
கடந்த கொரோனா அனர்த்த காலங்களில் சில வெளிநாட்டு அமைப்பினரை அணுகி பெறப்பட்ட நிவாரண உதவிகளை வழங்கிய குறித்த போலி வைத்தியர் தற்போது அந்நிவாரணங்களை பெற்ற மக்களை அணுகி வாக்கு பெறும் முயற்சியினை மேற்கொண்டுள்ளார்.
ஒழுங்காக மேடைகளில் கதைக்காது வெறும் அறிக்கையாக சில ஊடகவியலாளர்களின் மின்னஞ்சல்களுக்கு அறிக்கைகளை வழங்கி அதனை பிரசுரித்து வருகின்றார்.இவர் இதுவரை இலத்திரனியல் ஊடகங்களில் எதுவித நேர்காணலோ பேட்டிகளோ கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் ரஸ்யா நாட்டில் மருத்துவ பட்டத்தை பெறுவதற்காக மேற்படிப்பை தொடர்ந்த நிலையில் அதனை இடைநடுவில் கைவிட்டு இலங்கைக்கு வந்து ஒரு ஊடகத்தினை ஆரம்பித்து தன்னை ஒரு பெரிய அந்தஸ்து கொண்ட நபராக மக்களிடையே இனங்காட்ட முயற்சித்துள்ளார்.
இவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் இவர் உண்மையில் வைத்தியர் தானா என அறிந்து கொள்வதற்காக சுகாதார அதிகாரி ஒருவரின் உதவியை பெற்று குறித்த வேட்பாளரின் போலி வைத்தியர் முகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
இது தவிர அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் சிலர் சமட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டவர்கள் எனவும் மக்களிடம் குறித்த தவறுகளை மறைத்து வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக தேசியம் பேசி திரிவதாக விமர்சனஙங்கள் முன்வைக்கப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பாக வைத்தியரின் போலி முகம் தொடர்பில் குறித்த வைத்தியர் என்று கூறித்திரிகின்ற சயணொளிபவன் என்பவர் எமது இணையத்திற்கு உரிய ஆதாரத்துடன் பதிலளிப்பாராயின் அதுவும் பதிவேற்றப்படும் என்பதை எமது நிர்வாகம் தெரிவிக்க விரும்புகின்றது.