வடகொரியாவில் கணக்கை தொடங்கிய கொரோனா!! -முழு ஊரடங்கிற்கு உத்தரவு-
இதுவரையில் கொரோனா வைரசின் தாக்கம் இல்லாத நாடாக இருந்த வடகொரியாவில் தற்போது கொரோனா தனது கணக்கை ஆரம்பித்து வைத்துள்ளது.
இதன்படி அந்நாட்டில் நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இதுவரை தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று வடகொரியா கூறி வந்தநிலையில் தென்கொரியாவிலிருந்து வடகொரியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்த நபரால் கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அதிபர் கிம் ஜாங்க உன் உயராதிகாரிகளுடன் அவரச ஆலோசனை நடத்தினார்.
நாடு தழுவிய அவசர நிலையை பிரகடனப்படுத்தியதாகவும், கொரோனா வைரஸ் தொற்று பரவால் தடுக்க கேஸாங் நகரில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்ட நபர் கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.