மன்சூரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று
தமிழ்-முஸ்லிம் உறவு விரும்பியாகவும் யாழ்ப்பாண மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராகவும் இருந்த கல்முனையின்காவலன் வர்த்தக வாணிபத்துறை முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் 3 ஆவது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு இன்று(25) முற்பகல் மன்சூர் பௌண்டேசனின் செயலாளர் எம்.எம்.மிப்றாஸ் மன்சூர் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன
ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேசன் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் துஆப் பிரார்த்தனைகள் இடம்பெறற்றதுடன் சமூக சேவை வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன
இதன் ஓர் அங்கமாக மன்சூர் பௌண்டேசனால் பாலமுனை கைமா பள்ளிவாயலின் நீண்டகாலத் தேவையாக இருந்து வந்த நீர் இணைப்பும் நீர்ப்பாசன வசதிகளும் நிருவாகத்திடம் கையளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து துஆப் பிரார்ததனையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.