SuperTopAds

வெளிநாட்டில் இருந்து வந்தால் 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தல்!! -சொந்த செலவில் இருக்க வேண்டும் என்று அறிவிப்பு-

ஆசிரியர் - Editor III
வெளிநாட்டில் இருந்து வந்தால் 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தல்!! -சொந்த செலவில் இருக்க வேண்டும் என்று அறிவிப்பு-

வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புபவர்கள் கட்டாயமாக 7 நாட்கள் சுயதனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் அனைத்தும் அவரவர் சொந்த நிதியில் இருந்தே செலவு செய்ய வேண்டும் என்றும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் தனிப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் விமானங்களை இயக்க மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்தது.

அதன்படி பிரான்சில் இருந்து கடந்த 18 ஆம் திகதி முதல் ஆகஸ்டு முதலாம் திகதி வரை 28 விமானங்கள் இந்திய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. 

இதைப்போல அமெரிக்காவின் யுனைடெட் விமான நிறுவனம் 18 விமானங்களை வருகிற 31 ஆம் திகதி வரை இந்திய நகரங்களுக்கு இயக்குகிறது. ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளுடனும் விரைவில் இதுபோன்ற ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளன.

அதன்படி அவர்கள் வந்திறங்கும் விமான நிலையங்கள் மற்றும் அவர்கள் தனிமைப்படுத்தப்படும் பகுதிகளில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இதைப்போல அவர்கள் முதலில் வந்திறங்கும் நகரத்திலேயே சொந்த செலவில் 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு (நிறுவன தனிமைப்படுத்தல்) உட்படுத்தப்படுவார்கள். பின்னர் அவர்களது வீடுகளில் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.

நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு வேண்டுவோர் விமான நிலையங்களில் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து வழங்கி, அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர். 

டெல்லியை பொறுத்தவரை கர்ப்பிணிகள், குடும்பத்தில் மரணம், தீவிர நோய்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வருவோருக்கு மட்டுமே நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.