கொரோன தொற்று தீவிரம்!! -உலக நாடுகளை எச்சரிக்கும் சுகாதார நிறுவனம்-
உலகின் சில நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிர பரவலை எட்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் எச்சரிக்கை செய்துள்ளார்.
ஜெனீவாவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
கொரோனா தொற்று 1½ கோடி பேருக்கும் மேலாக பாதித்து இருப்பதாகவும், 6 இலட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனத்தில் பதிவாகி இருக்கிறது.
எல்லா நாடுகளும் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஒப்பீட்டளவில் சில நாடுகளில் தீவிரமான பரவலை நாங்கள் தொடர்ந்து பார்க்கிறோம்.
உலகளவில் கொரோனா பாதித்த ஒரு கோடி பேர் அல்லது மொத்த பாதிப்பில் மூன்றில் இரு பங்கினர் 10 நாடுகளை சேர்ந்தவர்கள். மொத்த பாதிப்பில் பாதிப்பேர் வெறும் 3 நாடுகளை சேர்ந்தவர்கள்தான்.
நாங்கள் ஏற்கனவே கூறியதுபோல, ஆட்சிக்கு தலைமை வகிப்பவர்கள், சமூக ஈடுபாடு உள்ளவர்கள் இரு முக்கிய தூண்களாக இருந்து கொரோனா தொற்றுக்கு எதிராக பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசைப் பொறுத்தமட்டில் பயன்படுத்த வேண்டிய கருவிகளில் ஒன்று சட்டம். இது கட்டாயப்படுத்துவது அல்ல. பொது ஆரோக்கியத்தையும், மனித உரிமைகளை யும் பாதுகாப்பது ஆகும் என்றார்.