பயணிகள் விமானத்தை நடு வானில் வழிமறிதத் போர் விமானம்!! -அச்சத்தால் திடீரென தரையிறங்கியதால் பலருக்கு காயம்-
சட்ட விதிகளை மீறி பயணிகள் விமானத்தை அச்சுறுத்தும் நடிவடிக்கைகளில் அமெரிக்க போர் விமானங்கள் ஈடுபட்டுள்ளதாக ஈரான் அரசு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் இருந்து நேற்று முன்தினம் துருக்கி பெய்ரூட்டிற்கு மஹன் பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. சிரியா எல்லையில் திடீரென அமெரிக்க போர் விமானம் மிக அருகில் இடைமறிப்பது போன்று வந்தது.
நொடிப்பொழுதில் சுதாரித்துக் கொண்ட விமானி விமானத்தின் உயரத்தை சட்டென்று குறைத்தார். இதனால் சில விமான பயணிகள் காயம் அடைந்தனர். பின்னர் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
போர் விமானம் அருகில் சென்றது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ள அமெரிக்கா இரு விமானங்களுக்கும் இடையில் 1000 மீட்டர் இடைவெளி இருந்தது என்று தெரிவித்துள்ளது.
இருப்பினும் அதனை மறுதலிக்கும் ஈரான் அரசு குறித்த விமானங்களுக்கு இடையே 100 மீட்டர் இடைவெளி மட்டுமே இருந்தது என தெரிவித்துள்ளது.