ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் “என் கனவு யாழ்” செயற்றிட்ட முன்னோடி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு..
ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் யாழ்.தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டிருக்கின்றது.
யாழ்.மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தலமையில் யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த விஞ்ஞாபனம் வெளியீடு இடம்பெற்றுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் 5 முன்னணி மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகியவற்றை மாற்றும் நோக்குடன்,
“என் கனவு யாழ்” என்னும் தொனிப் பொருளில், குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.குறித்த செயல்திட்ட வரைவில்
01.அரசியல் தீர்விற்கான ஆணித்தரமான அழுத்தம்.
02.மீண்டும் கல்வியில் முதலிடம்.
03.துரித பொருளாதார வளர்ச்சி,
04.விவசாயம், மீன்பிடி, கால்நடை துறைகளில் துரித மீளெழுச்சி.
05.மொழி, கலை, கலாச்சார, பண்பாட்டு, இலக்கிய புத்தாக்கம்.
06.அனைத்து தமிழ் உறவுகளையும் ஒரே புள்ளியில் இணைத்தல்.
07.உடல், உள நலன்மிக்க ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கல்.
08.தொழில்நுட்பத்தை மையப்படுத்திய சமூகமொன்றை கட்யெழுப்புதல்.
09.அறிவுபூர்வமான, சக்திமிக்க மகளிர், இளைஞர்களின் எதிர்காலம்.
10.இயற்கை, பௌதீக, ஆளணி வளங்களை மேம்படுத்தல்.
ஆகிய 10 அம்சங்கள் குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.