யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தொடரும் தென்னிலங்கை மீனவர் அத்துமீறல், அடாவடி..! இன்று முக்கிய வழக்கு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தொடரும் தென்னிலங்கை மீனவர் அத்துமீறல், அடாவடி..! இன்று முக்கிய வழக்கு..

யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமிறல்களுக்கு எதிராக அப்பகுதி மீனவர் சங்க சமாசங்கள் சட்டத்தரணி தி.சந்திரசேகரன் ஊடாக தாக்கல் செய்த வழங்க்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

வடமராட்சி கடல்பிரதேசத்தில் தென்னிலங்கையில் இருந்து வந்து அத்துமீறித் தொழில் செய்வோருக்கு எதிராக கடந்த ஆண்டு ஏ.ஆர்.2019/341 இலக்க வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பருத்தித்துறை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து 

இந்த தடைக்கட்டளை இரு வாரங்களிற்கு ஒரு தடவை நீடிக்கப்பட்டு வந்த நிலையில் பருவகாலம் முடிந்ததால் இனி அவ்வாறு நீடிக்கத் தேவையில்லை என பருத்தித்துறை பொலிசார் தெரிவித்த கூற்றின் அடிப்படையில் கைவிடப்பட்டு இருந்தது. 

இருந்தபோதும் இதேவகையான அத்துமீறிய தொழில் இந்த ஆண்டு பருவகாலத்தில் மீண்டும் இடம்பெறுவதனால் சமாசப் பிரதிநிதிகள் சட்டத்தரணி ஊடக நகர்த்தல் பத்தரம் ஒன்றை மன்றில் சமர்ப்பித்த நிலையில் குறித்த வழக்கு 

இன்றைய தினம் விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு இடம்பெறும் வழக்கில் சமாச பிரதிநிதிகள் சார்பில் சட்டத்தரணி தி.சந்திரசேகரனுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் ஆயராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2ம் இணைப்பு, 

குறித்த வழக்கில் இன்று ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் நிறுத்தப்படவேண்டும் என்ற கட்டளையை கோரியிருந்தார். 

எனினும் தென்னிலங்கை மீனவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி தொடர்பாக விசாரிக்கவேண்டும் எனவும், அதனை தாம் செய்ய முடியாது கடற்படையினரே செய்ய முடியும் எனவும் அதற்கு மன்று அனுமதி வழங்கவேண்டும் எனவும் பொலிஸார் கூறியிருந்தனர். 

எனினும் இன்றைய தினம் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகள் மன்னில் முன்னிலையாகாத நிலையில் வழக்கு 27ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு