கொரோனா அனர்த்த நிலைமையை பயன்படுத்தி தமிழர்கள் முஸ்லீம்களை விட அதிகளவான பிள்ளைகளை பெற முயற்சிக்க வேண்டும்
கொரோனா அனர்த்த நிலைமையை பயன்படுத்தி தமிழர்கள் முஸ்லீம்களை விட அதிகளவான பிள்ளைகளை பெற முயற்சிக்க வேண்டும் என விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான் ) அறிவுரை கூறியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் பெரிய நீலாவணை பகுதியில் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணித் தலைவரும் அகில இலங்கை தமிழர் மகாசபை சார்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள தலைமை வேட்பாளராகிய கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவருமான குணசேகரம் சங்கர் உள்ளிட்டோரை வரவேற்று நடாத்தப்பட்ட பிரசார கூட்டம் திங்கட்கிழமை(20) இரவு இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தெரிவித்ததாவது
அம்பாறை மாவட்டத்தில் தான் போட்டி இடுவதற்கு பிரதான காரணம் காணி ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவதற்கும் இருப்பை பாதுகாப்பதற்கும் ஆகும்.அடுத்ததாக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்வதாகும்.கூடுதலாக படிச்ச இளைஞர்கள் வேலையற்றவர்களாக உள்ள இடம் அம்பாறை மாவட்டமாகும்.இந்நிலை ஏற்படக்காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பாகும்.25 வயதுடைய இளைஞன் 3 தடவை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிப்பானால் ஆயின் 35 வயது அடைந்து மரக்கறி விற்பதற்கே செல்ல வேண்டும்.இது தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக செய்து வருகின்றது.தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் இனிவரும் காலங்களில் தேசியம் என்பதை கதைப்பதற்கு அருகதையற்றவர்கள்.நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் கலையரசன் என்பவர் ஒரு குட்டி சம்பந்தன்.இவர் நாவிதன்வெளி பிரதேச சபையினை மாற்று சமூகத்தினருக்கு தாரை வார்த்து விட்டார்.சுமந்திரன் என்பவர் ஒரு குள்ள நரி.தமிழ் தேசிய கூட்டமைப்பினை அழித்ததில் இவர் பெரும் பங்கு வகித்தவர்.இவர்கள் அமைச்சு பதவிகளை எதிர்காலத்தில் எடுத்து மக்களுக்கு சேவையாற்றுவோம் என ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.இதுவரை எடுக்காத அமைச்சு பதவிகளை இனிவரும் காலம் பிரதமர் இவர்களுக்கு கொடுப்பாரா ? உதை தான் விழும் என நினைக்கின்றேன்.முஸ்லீம் மக்களுக்கு எதிராக நான் கதைக்கவில்லை.முஸ்லீம் தலைவர்கள் தான் எமது மக்களிற்கு எதிரிகள்.தமிழர்கள் தனக்கு பின்னால் பயில் தூக்கி வர வேண்டும் என கூறிய அதாவுல்லாஹ் என்பவர் ஆசிரியர் தொழில் எடுப்பதற்கு குதிரை ஓடி கொடுத்தவர் ஒரு தழிழராவார்.எனவே இவரை போன்றவர்களுக்கு இனி படிக்கற்களால் தான் மண்டையில் எறிய வேண்டும்.
இத்தேர்தலானது எமது அம்பாறை மாவட்டத்தில் எமது இருப்பை பாதுகாக்கும் தேர்தலாகும்.எமது இனத்தை பாதுகாக்க சகலரும் முயற்சிக்க வேண்டும்.எதிர்காலத்தில் எமது சந்ததிகளை நாம் பாதுகாக்க கொரோனா அனர்த் நிலைமையை பயன்படுத்தி அதிகளவான பிள்ளைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.சிங்களவர்கள் தமிழர்கள் தலா இரு பிள்ளைகளை பெற்று நின்று விடுவார்கள்.ஆனால் முஸ்லீம்கள் ஜப்பான் குஞ்சு மாதிரி பிள்ளைகளை பெற்று வருகின்றார்கள.எனவே இனியாவது ஒருவர் 4 குழந்தைகளாவது பெறுங்கள்.தற்போது நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.கொரோனா அனர்த்தத்தினால் தனிமைப்படுத்தல் சந்தரப்பம் கிடைத்துள்ளது என்றார்.