நடிகை அமலாபால் விவகாரம் - தொழிலதிபருக்கு போலீஸ் வலை
மலேசியாவில் நடந்த டஸ்லிங் தமிழச்சி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்பந்தமாகி இருந்த நடிகை அமலாபால் சென்னை திநகரில் உள்ள நடன பள்ளியில் பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அமலாபாலிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை அமலாபால் மாம்பலம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.
இதையடுத்து, அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரசாக்கை சென்னை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இதுவரை சென்னையைச் சேர்ந்த அழகேசன், பாஸ்கர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் ரசாக்கிற்கு தொடர்புள்ளது என்பதை பல்லாவரத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் போலீசாரிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். அதேபோல், அமலா பாலின் இருப்பிடம், நடன பயிற்சிக்குச் செல்லும் நேரம் என எல்லாவற்றையும் பாஸ்கர் ரசாக்கிடம் பகிர்ந்துள்ளார் என்பதையும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்ட ரசாக்கின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால், ரசாக்கிற்கு நெருக்கடி முற்றுகிறது.மேலும் அவர் எங்குள்ளார் சென்னையிலா? மலேசியாவிலா என்ற குழப்பத்தில் சென்னை போலீசார் அவரை தேடிவருகின்றனர்.