நாவிதன்வெளி பிரதேச வறிய குடும்பங்களுக்கு மரக்கறி பயிர்கள் வழங்கிவைக்கப்பட்டது.
நாவிதன்வெளி பிரதேசத்தில் வாழும் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் கனடா ஆலம் விழுதுகள் அமைப்பின் ஊடாக மரக்கறி பயிர்கள் வழங்கிவைக்கப்பட்டது.
நாவிதன்வெளி கலாச்சார மத்திய நிலையத்தில் இன்று(20) காலை 11 மணியளவில் அமைப்பின் கிளை தலைவர் கே.நிர்மலரூபன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.
இதன்போது தென்னம்பிள்ளை , மரக்கறி பயிர் , விதைகள் என்பன தெரிவு செய்யப்பட்ட 66 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு நாவிதன்வெளி பிரதேச உதவி பிரதேச செயலாளர் என் . நவனீதராஜா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் , ஆலம் விழுதுகள் அமைப்பின் அங்கத்தவர்கள் பயனாளிகள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.