இந்தியாவில் கொரோனா உச்சம்!! -24 மணிநேரத்தில் 40,425 பேருக்கு தொற்று-
இந்தியாவில் கடந்து சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் என்றும் இல்லாதவாறு புதிதாக 40,425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,77,618 லிருந்து 11,18,043 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 681 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,816 லிருந்து 27,497ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,77,423 லிருந்து 7,00,087ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,90,459 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.