தமிழீழ விடுதலை புலிகளின் நோக்கம் அல்லது இலக்கு தவறானதல்ல..! எம்.ஏ.சுமந்திரன் கருத்து..
தமிழீழ விடுதலை புலிகளின் நோக்கம் தவறானதல்ல. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
இன்று காலை வானொலி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,
தமிழீழ விடுதலை புலிகள் போராடிய விதம் காலத்தின் கட்டாயமாக இருந்தாலும், அந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் நோக்கம் தவறானதல்ல என்றார்.