SuperTopAds

கொரோனா அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கான போஷாக்கான உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு

ஆசிரியர் - Editor IV
கொரோனா அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கான போஷாக்கான உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு

கொரோனா அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கான போஷாக்கான உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு  பாண்டிருப்பு கலாச்சார மண்டபத்தில் பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமானது.

அம்பாறை கல்முனை டொல்பின் விளையாட்டு கழக சிரேஷ்ட உறுப்பினர்களை கொண்ட டொல்பின் சமூக அமைப்பு கல்முனை வடக்கு சுகாதார பணிமனையோடு இணைந்து பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட   1 - 5 வயது எல்லைவரை உள்ள குழந்தைகள் அதன் தாய்மார்களுக்கான போஷாக்கான உணவு பொதிகளை சனிக்கிழமை(18)  வழங்கி வைத்தனர்.

 சுமார் 75 குடும்பங்களுக்கான போஷாக்கு உணவுப்பொதிகள் வழங்கும் குறித்த நிகழ்வானது  கொரோனா பாதுகாப்பு மற்றும்  தடுப்பு விடயங்களுக்கு ஏற்ப சமூக இடைவெளி பேணப்பட்டு ஆரம்பித்ததுடன் அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஷன் கல்முனை வடக்கு சுகாதார பணிமனை அதிகாரி டாக்டர். கணேஸராஜா மற்றும் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தினர் டொல்பின் விளையாட்டு கழக சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட   பயனாளிகள்  கலந்து கொண்டனர்.