SuperTopAds

இந்தியாவின் 32 வீதத்தால் சனத்தொகை குறையும்!!

ஆசிரியர் - Editor III
இந்தியாவின் 32 வீதத்தால் சனத்தொகை குறையும்!!

இந்தியாவின் மக்கள் தொகை 2048-ல் 160 கோடியாக உயரும் அதேவேளையில் 2100-ல் 32 சதவீதம் குறைந்து 109 கோடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆய்வாளர்கள் வொசிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த  2017-ல் இந்தியாவில் வேலைக்கு தகுதியான வயதுடைய நபர்கள் 76.2 கோடியாக இருந்த நிலையில்,  2100-ல்  57.8 கோடியாக குறையும் எனவும், சீனாவில் 2017-ல் 95 கோடியாக இருந்த நிலையில்  2100-ல் 35.7 கோடியாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.