ஹேக் செய்யப்பட்ட உலக பிரபலங்களின் ருவிட்டர்கள்!!
உலகில் மிக பிரபலங்கள் சிலரின் ருவிட்டர் கணக்குகளை இலக்குவைத்து சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன் உள்ளிட்ட பிரபலங்களின் கணக்குகளை கும்பல் ஒன்றினால் ஹேக் செய்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் எலான் மஸ்க், கேன் வெஸ்ட், கிம் கர்டாஷின் வெஸ்ட், ஜெப் பெசோஸ், மைக் ப்ளூம்பெர்க் ஆகியோரது ருவிட்டர் கணக்குகளும் நேற்று (புதன்கிழமை) ஹேக் செய்யப்பட்டன.
மேலும் ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களின் கணக்குகளையும் மோசடி கும்பல் திடீரென ஹேக் செய்துள்ளது.
அவர்களுடைய ருவிட்டர் பக்கங்களில் பிட்காயினுக்கு விளம்பரம் செய்யும் வகையில் ருவிட் செய்யப்பட்டுள்ளது.
பில்கேட்ஸின் ருவிட்டரில், ‘நான் திரும்பக் கொடுக்கவேண்டும் என்று எல்லோரும் கேட்கின்றனர். இதுதான் அந்த நேரம்’ என்று ருவிட் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, ஒபாமாவின் ருவிட்டர் பக்கத்தில் ‘கொரோனாவின் காரணமாக நான் என்னுடைய சமூகத்துக்கு எல்லாத்தையும் திரும்ப வழங்கப்போகிறேன். என்னுடைய முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ள எல்லா பிட்காயின்களையும் நான் இரட்டிப்பாக திரும்ப அனுப்பப் போகிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.