1.3 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு!! -5.71 இலட்சமாகியது உயிரிழப்பு-

ஆசிரியர் - Editor III
1.3 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு!! -5.71 இலட்சமாகியது உயிரிழப்பு-

உலகம் முழுவதும் 1.3 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அதே வேளை 5.71 இலட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 13,034,955 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7,581,525 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 58,928 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த 571,518 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலக சுகாதார அமைப்பு உலகளாவிய கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த  24 மணி நேரத்தில் 230,370 அதிகரித்துள்ளது என கூறி உள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் மிகப்பெரிய அதிகரிப்பு உள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் 2 வது இடத்தில் உள்ள பிரேசில் கடந்த 24 மணி நேரத்தில் 631 புதிய இறப்புகளைப் பதிவு செய்துள்ளது,  மொத்தம் 1,864,681 பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கணக்கீடு கூறுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு