இந்தியாவிலிருந்து காங்கேசன்துறை கடல்வழியாக யாழ்ப்பாணத்திற்குள் நுழைய முயற்சித்த 4பேர் கடலிலேயே கைது..!

ஆசிரியர் - Editor I
இந்தியாவிலிருந்து காங்கேசன்துறை கடல்வழியாக யாழ்ப்பாணத்திற்குள் நுழைய முயற்சித்த 4பேர் கடலிலேயே கைது..!

இந்தியா- தமிழகம் இடைத்தங்கல் முகாமிலிருந்து கள்ளதோணியில் காங்கேசன்துறை வழியாக யாழ்ப்பாணத்திற்குள் நுழைய முயற்சித்த 4 பேர் கடலிலேயே கைது செய்யப்பட்டிருப்பதுடன் அவர்களை தனிமைப்படுத்த மல்லாகம் நிதிமன்றின் அனுமதியும் பெறப்பட்டிருக்கின்றது. 

காங்கேசன்துறை கடற்பரப்பில் கடற்படையினர் நேற்று சனிக்கிழமை காலை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது காங்கேசன்துறை கடற்பரப்பில் பயணித்த படகு ஒன்று சோதனையிடப்பட்டது. அந்தப் படகில் படகு ஓட்டியுடன் நால்வர் பயணித்தனர். 

அவர்களில் இருவர் இந்திய முகாம்களிலிருந்து சட்டத்துக்கு புறம்பாக நாடு திரும்பியவர்கள் என்று விசாரணைகளில் தெரிய வந்தது.நால்வரும் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை பொலிஸார் மூலம் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். 

நான்கு பேரிடமும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவேண்டிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்திருக்க நீதிமன்ற அனுமதி பெறப்பட்டது என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு