புன்னாலைக்கட்டுவன் கட்டுக்குள நாச்சிமாருக்கு புதிய சித்திரத்தேர்_ நாளை வெள்ளோட்ட விழா VIDEO

ஆசிரியர் - Admin
புன்னாலைக்கட்டுவன் கட்டுக்குள நாச்சிமாருக்கு புதிய சித்திரத்தேர்_ நாளை வெள்ளோட்ட விழா VIDEO

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு அன்னை ஸ்ரீ கட்டுக்குள நாச்சிமார் ஆலயத்துக்கெனப்  புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நவகோண  சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா நாளை சனிக்கிழமை (24) நண்பகல்-12 மணியளவில் விமரிசையாக இடம்பெறவுள்ளது.

குறித்த சித்திரத்தேரினை விஸ்வப் பிரம்மஸ்ரீ, சிற்பக் கலாபூஷணம் ஆறுமுகம் கந்தசாமி மற்றும் அவர் தம் குழுவினர் அழகுற  நிர்மாணித்துள்ளனர்.

புன்னாலைக்கட்டுவன் வாழ் பக்தர்கள் மற்றும் புலம்பெயர் பக்தர்களின் பல இலட்சம் ரூபா நிதிப் பங்களிப்பில் புதிய சித்திரத்தேர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

நாளை இடம்பெறவுள்ள புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழாவில் அனைத்து அடியவர்களும் கலந்து சிறப்பித்து அன்னையின் பேரருளைப் பெற்றுய்யுமாறு  ஆலய நித்தியகுரு சிவஸ்ரீ குகந்தனசர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் எமது செய்திச் சேவைக்கு விசேடமாக வழங்கிய கருத்துக்களைக் காணொளி வடிவில்(வீடியோ) இங்கே இணைத்துள்ளோம்.