SuperTopAds

கோவிட்-19: தமிழகத்தில் 1,30,000ஐ கடந்த பாதிப்பு எண்ணிக்கை!

ஆசிரியர் - Admin
கோவிட்-19: தமிழகத்தில் 1,30,000ஐ கடந்த பாதிப்பு எண்ணிக்கை!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இன்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் ஆயிரத்து 829 ஆக உயர்ந்துள்ளன.

இதேவேளை, சென்னையில் மட்டும் ஒரேநாளில் ஆயிரத்து 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்தமாக 74 ஆயிரத்து 969 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 27 பேர் மரணித்துள்ளனர்.

சென்னை நீங்கலான தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் இன்று மொத்தமாக 2 ஆயிரத்து 475 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தமிழகத்தில் கொரோனா தொற்று பரிசோதனை ஆய்வுகூடங்களின் எண்ணிக்கை 101ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.