SuperTopAds

உலக அளவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,28,102 ஆக உச்சம் தொட்டுள்ளது!

ஆசிரியர் - Admin
உலக அளவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,28,102 ஆக உச்சம் தொட்டுள்ளது!

உலகெங்கிலும் 1.26 கோடிக்கு அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், கொரோனாபாதிப்பால் 559,000 க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். 68 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகள் குணமடைந்துள்ளனர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. உலகளாவிய கொரோனா வைரஸ் பாதிப்புகளில் தினசரி அதிகரிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 228,102 அதிகரித்துள்ளது என சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. அமெரிக்காவில் புதிய உச்சமாக, ஒரே நாளில் 63 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க மாகாணங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை திறந்து விட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் அசுர வேகம் எடுத்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 63 ஆயிரத்து 200 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அங்கு கடந்த 7 ஆம் தேதி அதிகபட்சமாக 60 ஆயிரம் பேருக்கு தொற்று பாதித்த தகவல் வெளியானது.தற்போது அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 31 லட்சத்தை கடந்து விட்டது.

கொரோனா தொற்றுக்கு அங்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1.33 லட்சத்தை தாண்டி இருக்கிறது.ஆனால், அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை அதிகரித்ததின் காரணமாகத்தான் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அங்கு 4 கோடிப்பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

பிரேசில் நேற்று 70,000 கொரோனா வைரஸ் இறப்புகளைத் தாண்டியுள்ளது என சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது, பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 45,000 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 1,200 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது, மொத்தம் 18 லட்சம் பாதிப்புகள் மற்றும் 70,400 இறப்புகள் அங்கு பதிவாகி உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடு பிரேசில் ஆகும்.