SuperTopAds

அமெரிக்கர்களும் பிரித்தானியர்களும் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வருவதை வெறுக்கும் ஜேர்மானியர்கள்!

ஆசிரியர் - Admin
அமெரிக்கர்களும் பிரித்தானியர்களும் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வருவதை வெறுக்கும் ஜேர்மானியர்கள்!

பிரித்தானியர்களும் அமெரிக்கர்களும் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வருவதை ஜேர்மானியர்கள் விரும்பவில்லை என ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது. சொல்லப்போனால், பெரும்பாலான, பிரான்ஸ் நாட்டவர்கள், ஜேர்மானியர்கள் மற்றும் ஸ்பெயின் நாட்டவர்கள், பிரித்தானியர்களும் அமெரிக்கர்களும் தங்கள் நாட்டுக்கு கோடை விடுமுறையில் சுற்றுலா வருவதை விரும்பவில்லையாம். YouGov அமைப்பு மேற்கொண்ட அந்த ஆய்வு, எல்லைகள் திறக்கப்பட்டபின் சுற்றுலாப்பயணிகள் தங்கள் பயணங்களை தொடங்கியுள்ளதைக் குறித்த ஐரோப்பியர்களின் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளது.

அந்த ஆய்வு அமைப்பு, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஜேர்மனி மக்கள் அனைவருமே ஒரு விடயத்தில் ஒத்துப்போவதாக தெரிவிக்கிறது. அது, அவர்கள் அனைவருமே தங்கள் நாட்டுக்கு ஐரோப்பியர்கள் வருவதை வரவேற்கும் நிலையில், பிரித்தானியர்கள் சுற்றுலா வருவதை எதிர்க்கிறார்கள் என்பதுதான். 40 முதல் 54 சதவிகிதம் ஸ்பெயின் நாட்டவர்கள் தங்கள் நாட்டுக்கு ஐரோப்பிய நாட்டவர்கள் வருவதையே எதிர்க்கும் நிலையில், 61 சதவிகிதத்தினர், பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் தங்கள் நாட்டுக்கு வருவதை எதிர்க்கின்றனர்.

அதேபோல், பிரான்ஸ் நாட்டவர்களில் 55 சதவிகிதத்தினரும், இத்தாலி நாட்டவர்களில் 44 சதவிகிதத்தினரும், ஜேர்மானியர்களில் 58 சதவிகிதத்தினரும் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதற்கு முக்கிய காரணம், பிரித்தானியாவில் காணப்படும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கைதான். அதைவிட அதிகம், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு சென்று திரும்பும் சுற்றுலாப்பயணிகள் மீது ஐரோப்பியர்களுக்கு விருப்பமின்மை காணப்படுவது குறிப்பிடத்தக்கது.