ஹரீஸோ அதாவுல்லாவோ பிரதிநிதியாக வந்தால் தமிழர்கள் நிர்க்கதியான நிலையில் தள்ளப்பட போகின்றார்கள்
கருணா அம்மான் அமைச்சராக இருந்த காலத்தில் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லீம் அமைச்சர்களின் சட்டவிரோத காணி அபகரிப்பு இடம்பெற்றதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.
அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக முதன்மை வேட்பாளராக போட்டியிடும் கவீந்திரன் கோடிஸ்வரனை ஆதரித்து கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கல்முனை பகுதியில் வியாழக்கிழமை(9) இரவு ஏற்பாடு செய்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தனது கருத்தில்
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை புணானை வீதியை அண்டிய பகுதியில் முஸ்லீம் குடியிருப்புகள் காணப்படுகின்றன.வாகரைப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் முஸ்லீம் அரசியல்வாதிகளினால் கையகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.அவை அனைத்தும் தமிழர்களின் பூர்வீகக்காணிகள்.காயங்கேணி வாழைச்சேனையில் ஒரு பகுதி போய்விட்டது.புலி பாய்ந்தகல் செங்கலடி ஆரையம்பதி பகுதிகளிலும் இவ்வாறு காணிகள் பறிபோய்விட்டது.இதற்கெல்லாம் காரணம் கருணா ஆட்சியில் இருந்தமை தான்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அவரின் சொந்த இடமான கிரான் உட்பட் சந்திவெளி படுவான்கரை பிரதேச உள்ள வீதிகளின் நிலைமை காபட் வீதிகளாகவும் மாடி வீடுகள் நிறைந்த இடங்களாகவும் இருக்கின்றன.இந்த இடங்கள் நிவ்யோர்க் சிங்கப்பூர் போன்ற தலைநகரங்கள் போன்று காட்சியழிப்பதான மாயையை அவர் தோற்றுவிக்கின்றார்.
ஆனால் அங்கு மக்களின் வறுமை உள்ளிட்ட அடிப்படை வசதியற்ற நிலைமையே காணப்படுகின்றது.அதனால் எமக்கு சகூக மட்டத்தில் மாபெரும் அதிர்ச்சி அடைந்துள்ள ஒரு பிரதேசமாக அது காணப்படுகின்றது.இதை நம்பவே முடியவில்லை.இப்போது அங்கு சென்று பார்த்தால் அனைத்து வீதிகளும் மணல்கள் நிறைந்த ஒழுங்கைகளாக காட்சியளிக்கின்றன.மேலும் இங்குள்ள வீடுகள் யாவும் கூரையற்ற வீடுகளாகவும் வெளிச்சமற்ற இடங்களாகவும் உள்ளன.அந்த கிராமத்தில் உள்ள மக்கள் தான் அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லீம்களின் அரிசி ஆலை கல்வெட்டுகின்ற குவாரிகள் குடும்பம் குடும்பமாக கொத்தடிமைகளாக உள்ளனர்.அம்பாறையில் உள்ள இளைஞர் யுவதிகள் முஸ்லீம்களின் அரசி ஆலைகளில் வேலை செய்வது குறைவு.எனவே தான் முஸ்லிம்களின் அரசியல் வாதிகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணரும் தனது சொந்த இடத்திலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியாத ஒரு கையாலாகதவர் கருணா அம்மான் அவர்கள்.
இவரின் ஒரு கபட வேடதாரி .அடுத்த முகம் அம்பலமாகின்றது அவர் அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினராக வந்தபோதுதான் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவான முஸ்லிம் அரசியல்வாதிகளின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளது.
இப்படியான கபடதாரிகள் இம்மாவட்டத்தில் களமிறக்கப்பட்டள்ளனர்.முகநூல் இணையத்தள வாயிலாக இவரது சுய நடவடிக்கைகளை பார்த்திருப்பீர்கள்.இப்படியான துரோகி என இருக்கின்றவருக்கு சொந்த குடும்பத்தை வழிநடத்த இயலாதவர்.பொய் மூட்டைகளை அவிழத்து விடுபவர் என்றெல்லாம் பெயர் எடுத்த இவரே மட்டக்களப்பு மாவட்டத்தை வறுமை உள்ள மாவட்டமாக மாற்ற காரணமாவார்.அதனால் தான் மட்டக்களப்பு மக்கள் அவரை பாராளுமன்றம் அனுப்பவில்லை.
2015 ஆண்டு நாம் பாராளுமன்ற உறுப்பினராக சென்ற நிலையில் கூட முஸ்லீம்களால் எமது காணிகளை இலகுவில் ஆக்கிரமிக்க முடியவில்லை.எந்த விடயங்களுக்கும் நாம் குரல் கொடுத்துக்கொண்டு தான் இருந்தோம்.உரிமை சார்ந்த விடயங்களுக்கு குரல் கொடுத்துக்கொண்டிருந்தோம்.எமது இருப்பு சார்ந்த விடயங்களுக்கு குரல் கொடுத்து கொண்டு தான் இருந்தோம்.பொருளாதாரம் சார்ந்த விடயங்களுக்காக குரல் கொடுத்து கொண்டு இருக்கின்றோம்.தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதன் ஊடாக இங்கு வரப்போவது யார்.அதற்கு பதிலாக ஹரீஸோ அதாவுல்லாவோ தான் இம்மாவட்ட பிரதிநிதியாக வரப்போகின்றார்கள்.அப்படி அந்த முஸ்லீம் பிரதிநிதித்துவம் வரும் போது அவர்கள் மதம் சார்பாகவும் இனம் சார்பாகவுமே தீர்மானம் எடுக்கும் சக்தியாக மாறுவார்கள்.இதனால் தமிழர்கள் நிர்க்கதியான நிலையில் தள்ளப்பட போகின்றார்கள். இதனால் பொருளாதாரம் பாதிக்கப்பட போகின்றது.எங்கள் அபிவிருத்தி பாதிக்கப்பட போகின்றது.எங்கள் இருப்பு பாதிக்கபட போகின்றது.எனவே தான் குரல் கொடுப்பதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் இருப்பது அவசியமாகும்.தமிழோடும் தேசியத்தோடும் பின்னிப்பிணைந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் இருக்க வேண்டும்.என்றார்.