SuperTopAds

ஒரு நாளில் கொரோனா குணமாக்கும் மூலிகை!! -இந்தியாவில் விற்பனை-

ஆசிரியர் - Editor III
ஒரு நாளில் கொரோனா குணமாக்கும் மூலிகை!! -இந்தியாவில் விற்பனை-

உலக நாடுகளை அச்சுறுத்தும் உயிர் கொல்லி கொரோனா வைரஸை ஒரே நாளில் குணமடையச் செய்யும் மூலிகை மைசூர்பா ஒன்ற இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 

இந்த விற்பனை நடவடிக்கைகள் தொடர்பில் அறிந்து கொண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்ததுடன், குறித்த விற்பனை நிலையத்திற்கும் படையெடுத்துள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- 

கோவை சின்னியம்பாளையத்தில் அடுத்த தொட்டி பாளையம் பகுதியில் ஸ்ரீ ராம் விலாஸ் நெல்லை லாலா ஸ்வீட்ஸ் என்ற பெயரில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் கடை உள்ளது. 

இதன் உரிமையாளர் எங்கள் கடையில் தயாரிக்கும் மூலிகை மைசூர்பாவை சாப்பிட்டால் ஒரே நாளில் கொரோனா குணமாகலாம் என்று நோட்டீஸ் அடித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்துள்ளார். 

இது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதை அறிந்த கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, அந்த கடையில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை, சுகாதாரத்துறை மற்றும் சித்த மருத்துவ துறைக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி, சுகாதார பணிகள் இணை இயக்குனர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம் ஆகியோர் அந்த கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். 

அப்போது, அந்த கடையில் எந்தவித முன் அனுமதியும் இன்றி மூலிகை மைசூர்பா, கொரோனா கொல்லி மைசூர்பா என்று தயாரித்து பச்சை நிறத்தில் 50 கிராம் பாக்கெட் (2 எண்ணம்) 50 ரூபாவிற்கும், ஒரு கிலோ 800 ரூபாவிற்கும் விற்பனை செய்தது தெரியவந்தது. 

எனவே, அனுமதி இல்லாமல் கொரோனா கொல்லி என்ற பெயரில் மைசூர்பா தயாரித்தது, அதை சாப்பிட்டால் ஒரே நாளில் கொரோனா வைரஸ் நோய் குணமாகும் என்று தவறான விளம்பரம் செய்தது என்று காரணங்களுக்காக அந்த கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.